கோசல தேசமானது கங்கைக்கு வடக்கே சரயூ நதி
பாய்ந்து செழிப்புற்ற விசாலமான தேசம் .
அந்த நாட்
டின் தலை நகரம் அயோத்தி .
மனு என்னும் புகழ்பெற்ற
சூரிய குல அரசனால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் .
மிக்க அழகும் புகழும் பெற்ற பெரிய நகரம் .
வால்மீகி வரு
ணித்திருப்பதைப் படித்தால் தற்கால ராஜதானி நக
ரங்களுக்கு எந்த விதத்திலும் அயோத்தி குறைந்த
தாகத் தோன்றவில்லை.
அந்த நாட்களிலேயே பாரத
தேசத்தில் நகரங்களும் நகரப் பண்பாடும் மிக உன்னத
நிலை அடைந்திருந்தன என்று தெரிகிறது .
தசரத சக்கரவர்த்தி இந்த அயோத்தி நக
ரத்திலிருந்துகொண்டு ராஜ்யத்தை ஆண்டு வந்தான் .
தசரதன் தேவர்களுக்காக யுத்தம் செய்தவன் . மூன்று
உலகங்களிலும் புகழ் பெற்ற அரசன் . இந்திரன் ,,
குபேரன் இவர்களுக்குச்
இருந்தான் .
கோசல நாட்டு ஜனங்கள் மிகச் சந்தோஷமாகவும்
யோக்கியமாகவும் வாழ்ந்து வந்தார்கள் .
எண்ணிறந்த
வீரர்க ளடங்கிய பெருஞ் சேனை ராஜ்யத்தை நன்றாகப்
பாதுகாத்து வந்தது .
சத்துருக்கள் கிட்ட நெருங்க
முடியாத நிலையில் தசரதன் அயோத்தி நகரத்தைப்
.பாதுகாத்து வந்தான் .
சேனா பலம் , கோட்டை மதில்
சுவர்கள் , அகழிகள் , எதிரிகளைத் தாக்கும் எந்திர
அமைப்பு , இவைகளால் காக்கப்பட்ட அந்த நகரம்
சத்துருக்களால் யுத்தம் செய்து பிடிக்க முடியாததாக
இருந்தது .
அந்த நகரத்துக்கு அயோத்தி என்ற
பெயர் மிகப்பொருத்தமாகவே இருந்தது.
அயோத்யா
என்றால் யுத்தத்தால் பிடிக்க முடியாத என்று .பொருள்.
VANATHI PATHIPPAGAM CHENNAI.
TITLE" CHAKRAWARTHY THIRUMAGAN BY C. RAJAJI
BOOK IN TAMIL SRIMADH RAMAYANAM.
BUY AND KEEP AT HOME FOR PEACE,GOOD HEALTH AND
PROSPERITY.
GIVE AS GIFT IN MARRIAGE AND ANNIVERSARIES,
THANKS A MILLION,
https://ia601702.us.archive.org/30/items/acc.-no.-30462-ramayanam/Acc.No.30462-Ramayanam.pdf
https://ia601702.us.archive.org/30/items/acc.-no.-30462-ramayanam/Acc.No.30462-Ramayanam.pdf
Lovely effort. Thanks a lot..... Sriram
ReplyDelete